கூடங்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நாளை மறுநாள் தொடக்கம் || kudankulam first reactor uraniyam refueling work day after start
Logo
சென்னை 04-07-2015 (சனிக்கிழமை)
கூடங்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நாளை மறுநாள் தொடக்கம்
கூடங்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நாளை மறுநாள் தொடக்கம்
நெல்லை, ஆக.11-
 
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்ட அணுமின் நிலைய பணிகள் கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் தொடங்கப்பட்டன.
 
இதைத்தொடர்ந்து முதலாவது அணுஉலையில் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டு வெப்ப சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம், முதல் அணுஉலையின் அழுத்தகலன்கள் திறக்கப்பட்டு மாதிரி எரிபொருள்கள் அகற்றப்பட்டன.
 
இதையடுத்து முதல் அணுஉலையில் 163 யுரேனியம் எரிகோல்களை பொருத்துவதற்கு அனுமதி கேட்டு கூடங்குளம் அணுமின்நிலையம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு விண்ணப்பித்தது.  
 
இந்தநிலையில் கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்புவதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதுகுறித்து அதன் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் கூறுகையில்,
 
எங்கள் பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கியுள்ளோம் என்றார். இதைத்தொடர்ந்து கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்கள். அதில் நாளை மறுநாள் முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியை தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 4.57 மீட்டர் நீளம் கொண்ட 163 எரிகோல்களிலும் எரிபொருள்களை நிரப்ப இரண்டு வார காலம் ஆகும்.
 
இந்த பணியை பார்வையிட இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூடங்குளம் வருகின்றனர். எனவே இந்த மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கிவிடும். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த அணுஉலையில் செறிவூட்டப்பட்ட யூரேனியம் எரிபொருளாகவும், குளிர்ச்சி யூட்டும் பொருளாக தண்ணீரும் பயன்படுத்தப்படும்.  
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதை யொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வலதுசாரி தீவிரவாதிகளால் பிரதமர் உயிருக்கு ஆபத்தா?: உள்துறை அமைச்சகம் விளக்கம்

வடகிழக்கு மாநிலங்களில் அட்டூழியம் செய்துவரும் வலதுசாரிகளால் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து காத்திருப்பதாக சமீபத்தில் வெளியான ....»