டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்: கருணாநிதி பேட்டி || chennai police dgp permission to teso meeting
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்: கருணாநிதி பேட்டி
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்: கருணாநிதி பேட்டி
சென்னை, ஆக. 10-
 
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுவதற்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
 
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12-ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு (டெசோ) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி காவல்துறைதான் முடிவு செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.
 
இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், ‘டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். மாநாடு நடைபெறுவதற்கு காவல்துறை ஆணையர் அனுமதி தருவார் என நம்புகிறோம். யார் பேச்சையும் கேட்டுக்கொண்டு போலீஸ் செயல்படக்கூடாது.
 
காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஈழம் என்ற சொல் பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநாட்டுப் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன’ என்றார்.
 
ஒருவேளை டெசோ மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி தர மறுத்தால் தடையை மீறி மாநாடு நடக்குமா?  என்று கேட்டபோது, தடைக்கற்களும் படிக்கற்களாகும் என்று கருணாநிதி கூறினார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார் சுஷ்மா சுவராஜ்

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பயணத்தை ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif