பள்ளி பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் || school bus new rules Time tamilnadu government high court
Logo
சென்னை 31-01-2015 (சனிக்கிழமை)
பள்ளி பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
பள்ளி பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
சென்னை, ஆக.10-

சேலையூரில் சீயோன் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி சிறுமி சுருதி பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து பலியானாள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கில் பள்ளி பஸ்களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்ட விதிகளை வகுக்கும்படி உத்தரவிட்டிருந்தது. எனவே இதுகுறித்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார். பின்னர், பள்ளி பஸ்களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டவிதிகளை வகுக்க அரசு கமிட்டி அமைத்துள்ளது.

எனவே கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்றார். அதை தொடர்ந்து இந்த அறிக்கையை காலம் கடத்தாமல் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான முக்கிய கூட்டத்தை தவிர்ப்பதா?: தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பவது தொடர்பாக மத்திய அரசு நடத்திய முக்கிய கூட்டத்தில் பங்கேற்காததற்கு தமிழக ....»