ஜெயலலிதா பற்றி விமர்சனம்: கருணாநிதி மீது தமிழக அரசு வழக்கு || jayalalitha opinion tamilnadu government complaint karunanidhi
Logo
சென்னை 18-09-2014 (வியாழக்கிழமை)
  • கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி
  • குஜராத் சுற்றுப்பயணத்தை முடித்து டெல்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்
  • நாகை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி பூம்புகாரில் மீனவர்கள் உண்ணாவிரதம்
  • காஞ்சிபுரம் அருகே அண்ணன்-தம்பி தகராறில் தம்பி படுகொலை
ஜெயலலிதா பற்றி விமர்சனம்: கருணாநிதி மீது தமிழக அரசு வழக்கு
ஜெயலலிதா பற்றி விமர்சனம்: கருணாநிதி மீது தமிழக அரசு வழக்கு
சென்னை, ஆக.10-

தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு சென்னை செசன்சு கோர்ட்டில் இன்று அவதூறு வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வக்கீல் ஜெகன் இந்த மனுவை தாக்கல் செய்தார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 30-ந்தேதி வெளியான முரசொலி பத்திரிகையில் கலைஞரின் கேள்வி-பதில் பகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொட நாட்டில் தங்கியிருப்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். அவர் கூறிய பதில் அவதூறானது, உள்நோக்கம் கொண்டது, உண்மைக்கு புறம்பானது.

மேலும் இந்த செய்தியை முரசொலி பத்திரிகை எந்த வித விசாரணையும் செய்யாமல் உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி நல்ல எண்ணம், நல்ல நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இந்த செய்தி வெளியிட்ட முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம், கேள்வி-பதில் பகுதிக்கு பதில் அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகிய இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் ஆகிய இருவரும் இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.    
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வங்கதேசத்தில் அரசியல் தலைவர் மீதான போர்க்குற்ற வழக்கில் தண்டனை குறைப்பு

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு தேசப்பிரிவினையை வலியுறுத்தி பாகிஸ்தானுக்கும், வங்கதேச தேசியவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. இதில் ....»