டீசல், கியாஸ், விலையை உயர்த்த வேண்டும்: எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தல் || diesel gas price increase petroleum companies
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
டீசல், கியாஸ், விலையை உயர்த்த வேண்டும்: எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தல்
டீசல், கியாஸ், விலையை உயர்த்த வேண்டும்: எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தல்
புதுடெல்லி, ஆக.10-

மத்திய அரசு கடைப்பிடித்து வரும் எரிபொருள் விலை கொள்கையால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. டீசல், கியாஸ் விலை நிர்ணய உரிமையை அரசே வைத்துள்ளது.

இதனால் எண்ணெய் நிறுவனங்களால் சில எரிபொருள்களின் விலைகளை மாற்றி அமைக்க முடியவில்லை. மானியம் வழங்க வேண்டும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கைகளையும் அரசு முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா கூறியதாவது:-

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ளது. இந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.22 ஆயிரத்து 451 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.3 ஆயிரத்து 719 கோடி மட்டுமே நஷ்டம் ஏற்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.9 ஆயிரத்து 428 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. டீசல், கியாஸ் இவற்றை குறைந்த விலைக்கு விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அரசு மானியம் வழங்க உறுதி அளித்தது. ஆனால் இதுவரை மானியம் கிடைக்கவில்லை.

இப்போது நாங்கள் சொல்லி இருக்கும் இழப்பு தொகை ஆரம்ப இழப்புதான். மானியம் வராததால் ஏற்பட்ட இழப்பு, மொத்த இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும். நாங்கள் நீண்ட காலமாக கோரி வருகிறபடி, டீசல், கியாஸ் போன்ற எரிபொருள்களின் விலையை உயர்த்தினால்தான், நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும். விலை நிர்ணய உரிமையை முழுமையாக எங்களிடம் விட்டு விட வேண்டும். அல்லது அரசே விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சோனியா, மன்மோகன் சிங்கை வாசலுக்கு வந்து வரவேற்ற மோடி

சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுவதற்கு பிரதமர் ....»