சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு: இலங்கை தலைவர்களுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு || Subramanian Swamy meets top leaders in Lanka
Logo
சென்னை 29-08-2015 (சனிக்கிழமை)
சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு: இலங்கை தலைவர்களுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு
சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு: இலங்கை தலைவர்களுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு
கொழும்பு,ஆகஸ்ட்.9-
 
சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றுள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி, அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்‌ஷே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பெய்ரிஸ் ஆகியோரை இன்று சந்தித்தார்.
 
விடுதலைப்புலிகளை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் இலங்கை அரசுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும், சுப்ரமணிய சாமி அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்‌ஷேவையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு அந்நாட்டில் நேற்று துவங்கியது.
 
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை குறித்த சிறப்பு விவாதமும் இந்த கருத்தரங்கில் நடைபெற உள்ளது. இலங்கை ராணுவத்தால் நடத்தப்படும் இக்கருத்தரங்கு கடந்த வருடமும் நடத்தப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் சீனா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ள இக்கருத்தரங்கில் சுப்ரமணிய சாமி நாளை உரையாற்றுகிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பட்டேல் இடஒதுக்கீட்டு போராட்டம்: காவல்நிலைய மரணம் தொடர்பாக 9 போலீஸ்காரர்கள் மீது வழக்கு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் படேல் சமுதாயத்தினர் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பொது ....»

amarprash.gif