குவாரிகள் மூடப்பட்டதால் மணல் விலை உயர்வு: கட்டுமான பணிகள் பாதிப்பு || Quarry shut down Sand prices increase
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
குவாரிகள் மூடப்பட்டதால் மணல் விலை உயர்வு: கட்டுமான பணிகள் பாதிப்பு
குவாரிகள் மூடப்பட்டதால்
 மணல் விலை உயர்வு: கட்டுமான பணிகள் பாதிப்பு
சென்னை, ஆக 8-

திருச்சி, தஞ்சை, நாகை, கரூர் மாவட்டங்களில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் மணல் குவாரிகளை உடனே மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவடட்டங்களான திருச்சி, தஞ்சை, கரூர், நாகை, மாவட்டங்களில் செயல்பட்ட குவாரிகள் உடனடியாக மூடப்பட்டன. மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டதால் சுமார் 5 ஆயிரம் லாரிகள் முடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மணல் தட்டுப்பாடு உருவாகி உள்ளது.

காவிரி ஆற்றில் மணல் அள்ள முடியாததால் மற்ற ஊர்களுக்கு சென்று ஆறுகளில் மணல் அள்ளு கிறார்கள். இதற்கு கடும் போட்டி நிலவுவதால் ஆற்று அருகிலேயே பதுக்கி வைத்து மணல் 2-வது விற்பனை செய்யப்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி, பாலு செட்டி சத்திரம், வாலாஜா, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் உள்ள குவாரிகளில் மணல் எடுத்து வந்தனர். இப்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சென்னையிலும் மணல் தட்டுப்பாடு உருவாகி விட்டது. மணல் தட்டுப்பாடு குறித்து, அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி விற்கும் பில்டர்ஸ் அம்பத்தூர் மோகன் கூறுகையில், 4 யூனிட் மணல் ரூ.12 ஆயிரத்துக்கு விற்கப்படுவதாகவும் தற்போது ஆறுகளில் மணல் எடுக்க முடியாமல் யார்டுக்கு சென்றுதான் மணல் வாங்கி வருவதாகவும் கூறினார்.

இதுமட்டுல்ல கிராவல், சவுடு மண் எல்லாமே விலை உயர்ந்து விட்டது. அரசு குவாரிகளில் 1 லோடு மணல் ரூ.1850-க்குதான் தருவார்கள். அதனை 2-வது விற்பனையில் பெறும் போது ரூ.6 ஆயிரம் கொடுத்து பெற வேண்டிய நிலை உளள்து. லாரி வாடகை, டீசல், டிரைவர் சம்பளம், பேட்டா போன்றவற்றை சேர்த்து பார்க்கும் போது ஒரு லோடு மணலின் விலை ரூ.12 ஆயிரம் வரை வந்து விடுகிறது. 1 லாரி மணல் அள்ள சென்றால் 3 நாள் காத்திருந்துதான் லாரி திரும்பி வருகிறது. இதனால் கட்டுமான பணிகள் வெகுவாக பாதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் 15 குவாரிகள் மூடப்பட்ட தால் தற்போது செயல்படும் குவாரிகளில் மணல்லோடு ஏற்ற அனைத்து லாரிகளும் குவிகின்றன. இதனால் லாரி உரிமையாளர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படுகிறது. நேற்று திருச்சி கொண் டையம்பேட்டை குவாரி யில் முதலில் உள்ளூர் லாரிகளுக்கு லோடு ஏற்றி விட்டு வெளிமாவட்ட லாரிகளுக்கு மணல் ஏற்ற வேண்டும் என திருவா னைக்காவல் மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவாரிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட மணல் விலை உயர்வு, பதுக்கல், லாரி உரிமையாளர்கள் மோதல் போன்ற பிரச்சினைகளை தடுக்க மூடப்பட்ட குவாரிகள் மீண்டும் திறக்க வேண்டும். என கோரிக்கை எழுந்து உள்ளது. இதற்காக சுற்று சூழல் மதிப்பீட்டு ஆணை யத்தின் அனுமதி பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பால் விலை உயர்வுக்கு காரணம் என்ன?: அதிகாரி விளக்கம்

பால் விலை உயர்வுக்கான காரணம் குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:– இதற்கு முன்பு 2011 நவம்பரில் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif