Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
பெண்களுக்கான 800மீ ஓட்டம்: இந்திய வீராங்கனை டின்டு அரை இறுதிக்கு முன்னேற்றம்
லண்டன், ஆக.8-
 
தடகளத்தில் பெண்களுக்கான 800மீ தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை டின்டு லுகா கலந்து கொண்டார். 'ஹீட் 2'ல் இவருடன் மேலும் 6 நாட்டு வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர். போட்டியின் முடிவில் டின்டு 3-வது இடத்தைப் பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார். இவர் 2 நிமிடம் 01.75 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
 
ரஷிய வீராங்கனை மரியா 2 நிமிடம்  01.56 வினாடிகள் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பெற்றார். மேலும் இதே பிரிவில் மொராக்கோ, அமெரிக்க வீராங்கனைகளும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
 
'ஹீட் 1' அமெரிக்கா, மொராக்கொ, தென்ஆப்பிரிக்கா, கியூபா வீராங்கனைகள் தகுதிபெற்றனர். 'ஹீட் 3'ல் புருண்டி, ஜப்பான், பக்ரைன் வீராங்கனைகளும், 'ஹீட் 4'ல் கென்யா, பிரிட்டன், கிரீஸ், அமெரிக்க வீராங்கனைகளும், 'ஹீட் 5' ல் உக்ரைன், ரஷியா, கென்யா வீராங்கனைகளும், 'ஹீட் 6'ல் கென்யா, ரஷியா, கொலம்பியா, ரொமானியா, கஜகஜஸ்தான், கிரேநடா ஆகிய வீராங்கனைகளும் அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
 
நாளை அரைஇறுதிப் போட்டி நடைபெறுகிறது.

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 0–5 என்ற கணக்கில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக ....»