சீக்கியர் கோவில் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அமெரிக்காவில், மசூதிக்கு தீ வைப்பு || Sikh Temple firing Following mosque fired
Logo
சென்னை 01-11-2014 (சனிக்கிழமை)
சீக்கியர் கோவில் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அமெரிக்காவில், மசூதிக்கு தீ வைப்பு
சீக்கியர் கோவில் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அமெரிக்காவில், மசூதிக்கு தீ வைப்பு
வாஷிங்டன், ஆக.8-

அமெரிக்காவில் விஸ்கான் சின் மாகாணத்தில் ஓக்கிரீக் என்ற இடத்தில் குருத்வாராவுக்குள் (சீக்கியர்கள் கோவில்) புகுந்த நிற வெறியன் கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இதில் 6 பேர் பலியாகினர். இச்சம்பவம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிலையில், தற்போது மசூதிக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மிஸ்கோரி மாகாணத்தில் ஜோப்லின் என்ற இடத்தில் முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதிக்கு நேற்று மர்ம நபர்கள் தீவைத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் மசூதி முழுவதும் எரிந்து நாசமானது.

ரம்ஜான் மாதத்தையொட்டி அங்கு சிறப்பு தொழுகை நடந்து வந்தது. தொழுகை நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தீவைப்பு சம்பவம் நடந்ததால் உயிர்சேதமோ, காயமோ எதுவும் ஏற்பட வில்லை. இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டது யார் என தெரியவில்லை.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதே மசூதிக்கு தீவைக்கப்பட்டது. தற்போது இது போன்ற சம்பவம் 2-வது முறையாக நடந்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சீனாவில் 8 வயது மாணவன் குத்திக்கொலை

சீனாவில் சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூட மாணவர்களை குறி வைத்து ஒரு ....»