ஆக்ரா: ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் எந்திரம் எரிந்து நாசம் || ATM in Agra burns down with 30 lakhs of cash inside
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
ஆக்ரா: ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் எந்திரம் எரிந்து நாசம்
ஆக்ரா: ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் எந்திரம் எரிந்து நாசம்
ஆக்ரா,ஆகஸ்ட்.7-
 
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் எந்திரம் ஒன்று நேற்று தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. ஆக்ராவின் எட்மாத்பூரில் அமைந்துள்ள அந்த ஏ.டி.எம் மையத்திலுள்ள, ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக அம்மையத்தின் காவலாளி தெரிவித்துள்ளார். 
 
ஏ.டி.எம் மையத்தில் பரவிய தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அணைத்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.  அந்த எந்திரத்தில் நிரப்பப்பட்டிருந்த ரூ.30 லட்சம் பணமும் எரிந்து போனதாகவும், சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எந்திரத்தில் பணம் நிரப்பப்பட்டதாகவும், வங்கியின் கிளை மேலாளர் ராம் கிஷோர் கூறியுள்ளார்.
 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அந்த ஏ.டி.எம் எந்திரம் பழுதுபார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

முதல்-மந்திரி சித்தராமையா மீது எடியூரப்பா, குமாரசாமி கடும் தாக்கு

மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி சித்ரதுர்காவில் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif