டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசு தவறான பிரசாரம்: கருணாநிதி அறிக்கை || teso meeting srilanka fake proganda karunanidhi statement
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசு தவறான பிரசாரம்: கருணாநிதி அறிக்கை
டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசு தவறான பிரசாரம்: கருணாநிதி அறிக்கை
சென்னை, ஆக. 8-
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இலங்கை அரசின் சார்பாக 6-8-2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டினை இலங்கை அரசு வன்மையாக கண்டிக்கின்றது என்றும், அந்த அரசின் சார்பில் ஊடகத்துறை அமைச்சர் ஒருவர் இந்த மாநாட்டில் பங்கேற்போர் மீது அரசு கவனம் செலுத்தியுள்ளதாக கூறியிருப்பதாகவும், செய்திகள் கிடைத்துள்ளன.
 
இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப்பதும் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் பேசுவது கவலையைத் தருகிறது.
 
இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். அதற்காகவே இந்த டெசோ மாநாடு நடைபெறுகிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்தத் தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத்தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

பா.ஜனதா கூட்டணியை உதற தயாரா?: ராமதாசுக்கு இளங்கோவன் சவால்

சென்னை, அக். 4–தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–இலங்கை இறுதிகட்ட போரின் ....»

VanniarMatrimony_300x100px_2.gif