20 ஓவர் போட்டியிலும் வெற்றி: பேட்டிங், பவுலிங்கில் சமபலத்துடன் உள்ளோம் டோனி சொல்கிறார் || twenty over match win india cricket captain dhoni
Logo
சென்னை 02-06-2015 (செவ்வாய்க்கிழமை)
  • காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் இன்று இந்தூர் பயணம்
  • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளில் இருந்து இன்று நீர் திறப்பு
  • கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
20 ஓவர் போட்டியிலும் வெற்றி: பேட்டிங், பவுலிங்கில் சமபலத்துடன் உள்ளோம் -டோனி சொல்கிறார்
20 ஓவர் போட்டியிலும் வெற்றி: பேட்டிங், பவுலிங்கில் சமபலத்துடன் உள்ளோம் -டோனி சொல்கிறார்
பல்லேகலே, ஆக. 8-

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முத்திரை பதித்த இந்திய அணி நேற்று நடந்த 20 ஓவர் போட்டியிலும் சாதித்தது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. வீராட் கோலி 48 பந்தில் 68 ரன்னும் (11 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரெய்னா 25 பந்தில் 34 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 18 ஓவரில் 116 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 39 ரன்னில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 31 ரன்னும், கேப்டன் ஜெயவர்த்தனே 26 ரன்னும் எடுத்தனர். அசோக் திண்டா 4 விக்கெட்டும், இர்பான் பதான் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:-

ஒட்டுமொத்தமாக இந்திய வீரர்களின் ஆட்டம் இந்த தொடரில் சிறப்பாக இருந்தது. நாங்கள் 15 ரன் வரை குறைவாக எடுத்தோம் என்றாலும் ஆடுகளத்துக்கு ஏற்ற வகையில் பவுலர்கள் சிறப்பாக வீசினார்கள். ஆடுகளத்தின் தன்மை மாறிவிட்டது. எங்களது பேட்டிங்கும், பந்து வீச்சும் சமபலமாக இருந்தது. இலங்கையை விட இந்த இரண்டிலும் நாங்கள் சிறப்பாக இருந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயவர்த்தனே கூறும் போது, 156 ரன் எடுக்க வேண்டிய இலக்கே. நாங்கள் செய்த சிறிய தவறுகளால் தோல்வி அடைந்தோம் என்றார். இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெற்றது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ....»