இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது || SriLanka vs India T20 Cricket
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
பல்லிகெலே,ஆகஸ்ட்.7-
 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி, இலங்கைக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
இரு அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி அங்குள்ள பல்லிகெலே மைதானத்தில் இன்று நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே பீல்டிங் தேர்வு செய்தார்.
 
இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான காம்பீர் 6 ரன்னில் வீழ்ந்தாலும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானேவும், கோலியும் சிறப்பாக ஆடினர்.
 
ஒருபக்கம் ரஹானே பொறுமையாக ஆட, மறுமுனையில் கோலி அதிரடியாக ஆடி ரன் குவித்தார். ரஹானே 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கோலியும், ரெய்னாவும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய கோலி 32 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அவர் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. ரெய்னா 34 ரன்களுடனும், டோனி 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் புதுமுக வீரர் எரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 
இதனையடுத்து 156 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் அதிரடியாக ஆடினாலும், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியின் ஜெயவர்த்தனே 26 ரன்களும், திரிமன்னே 20 ரன்களும், மேத்யூஸ் 31 ரன்களும் எடுத்தனர்.
 
இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களில் 116 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
இந்திய வீரர் திண்டா 4 விக்கெட்டுகளையும், இர்பான் பதான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட 20 ஓவர் தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.    
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

லோக்பால் மசோதா: ஆய்வறிக்கையை சமர்பிக்க மூன்றாவது முறையாக காலக்கெடு நீட்டிப்பு

லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது ஆய்வறிக்கையை ....»

VanniarMatrimony_300x100px_2.gif