சீர்காழியில் டெசோ மாநாடு விளக்க கூட்டம்: ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. பங்கேற்பு || sirkazhi teso meeting explain aks vijayan mb participates
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
சீர்காழியில் டெசோ மாநாடு விளக்க கூட்டம்: ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. பங்கேற்பு
சீர்காழியில் டெசோ மாநாடு விளக்க கூட்டம்: ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. பங்கேற்பு
சீர்காழி ஆக,7-
 
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெறும் டெசோ மாநாடு விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கவுன்சிலர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
 
மாவட்ட துணை செயலாளர் ஞானசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ பன்னீசெல்வம், ஒன்றிய செயலானர் மோகன.அன்பழகன், நகர் மன்றத் தலைவர் இறைஎழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்றார்.
 
கூட்டத்தில் நாகை மாவட்ட செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் எம்.பி கலந்துக்கொண்டு டேசொ மாநட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.தலைமை கழக பேச்சாளர்கள் ஆரணிமாலா, நாகராஜன் கலந்துக்கொண்டு பேசினர்.
 
இதில் முன்னாள் நகர செயலாளர் பொன்முடி,மாவட்ட கவுன்சிலர் மதியழகன்,மாநில மீனவரணி துணை அமைப்பாளர் அருமரா ஜகோபால்,முன்னாள் நகராட்சி தலைவர் சாந்தினி, அருண்சிங், கவுன்சிலர்கள் காமராஜ், குகன், பந்தல்முத்து, திருசெல்வம், விஜயக்குமார், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் தன்ராஜ், நகர மாணவரணி செயலாளர் செல்வமுத்துக்குமார், நகர துணை செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் துரை, கட்சி நிர்வாகிகள் முத்துக்குமார், கண்ணதாசன், தங்க.சுகுமார், ஜீவராஜ்,  ரத்தினசபாபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் இராஜசேகரன் நன்றி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - நாகப்பட்டினம்

section1

தி.மு.க.–அ.தி.மு.க.வுக்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும்: இல.கணேசன் பேட்டி

மயிலாடுதுறை,பிப்.11–நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் வாக்குச்சாவடி பொறுப்பளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா தேசிய குழு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif