அன்னா குழு ஓடிவிட்டதால் ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு || Team Anna fled from scene Ramdev should concentrate on yoga says Lalu
Logo
சென்னை 28-04-2015 (செவ்வாய்க்கிழமை)
  • ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி
  • நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் எங்கள் நாட்டு மக்களை மீட்டுத் தாருங்கள்: இந்தியாவிடம் ஸ்பெயின் வேண்டுகோள்
அன்னா குழு ஓடிவிட்டதால் ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு
அன்னா குழு ஓடிவிட்டதால் ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு
புதுடெல்லி,ஆகஸ்ட்.7-


'ஊழலுக்கு எதிரான அன்னா குழுவை, அன்னா ஹசாரே கலைத்திருப்பது பாபா ராம்தேவுக்கு பெரும் பின்னடைவு ஆகும். எனவே ஊழல் மற்றும் கறுப்புப்பணத்துக்கு எதிரான தனது போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ராம்தேவ் மீண்டும் யோகாவில் கவனம் செலுத்தவேண்டும்’ என ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள லாலு, ‘உண்ணாவிரதத்தைத் தொடரும் திறன் அன்னா குழுவினருக்கு இல்லை. கைது நடவடிக்கைக்கு பயந்து அவர்கள் ஓடிவிட்டனர். இது ராம்தேவுக்கு பெரும் பின்னடைவாகும். எனவே ராம்தேவ் இனி யோகாவில் மட்டும் கவனம் செலுத்தட்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும், மக்களவை தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளை சாராத ஒருவர் பிரதமராகும் வாய்ப்பிருப்பதாகக் பாரதீய ஜனதா தலைவர் அத்வானி கணித்திருப்பது, கூட்டணியைப் பிரிக்கும் முயற்சி என லாலு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி பேசும்போது, ‘தேர்தலில் வாக்குகள் சிதறலாம். ஆனால் இப்போதெல்லாம் தேர்தல்களில் வகுப்புவாத சக்திகளுக்கும், மதசார்பற்ற சக்திகளுக்குமிடயேதான் போட்டி காணப்படுகிறது. ஆனால் வகுப்புவாத சக்திகள் கூட்டணியைப் பிரிக்கவே முயற்சி செய்யும். அத்தகைய சூழல்களில் மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று திரளும். எனவே மூன்றாவது அல்லது நான்காவது அணி அமைவது சாத்தியமில்லாதது. தேர்தலில் மக்கள் மீண்டும் வகுப்புவாத சக்திகளைப் புறக்கணிப்பர். எனவே மதசார்பற்ற சக்திகள் வென்று ஆட்சி அமைக்கும்’ என லாலு கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

amarprakash160-600.gif