இரண்டாவது முறையாக அன்சாரி துணை ஜனாதிபதியாக தேர்வு: 11 ந்தேதி பதவியேற்கிறார் || vice president election ansari get 490 votes
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
இரண்டாவது முறையாக அன்சாரி துணை ஜனாதிபதியாக தேர்வு: 11-ந்தேதி பதவியேற்கிறார்
இரண்டாவது முறையாக அன்சாரி துணை ஜனாதிபதியாக தேர்வு: 11-ந்தேதி பதவியேற்கிறார்
புதுடெல்லி, ஆக.7-
 
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் அமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது.
 
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அமீது அன்சாரி மீண்டும் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த்சிங் போட்டிட்டார். பாராளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய இத்தேர்தலுக்கா ஏற்பாடுகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள 63-ம் எண் அறையில் செய்யப்பட்டிருந்தன.
 
காலை 10 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் சரத்பவார், ப.சிதம்பரம், சுசில்குமார் ஷிண்டே, பவன்குமார் பன்சால் உள்ளிட்ட அனைத்து மத்திய மந்திரிகளும் ஓட்டு போட்டார்கள்.
 
மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அன்சாரி முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அன்சாரி 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 8 வாக்குகள் செல்லாதவையாகும்.
 
இந்த வெற்றியின் மூலம் அன்சாரி 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகிறார். இதற்கு முன் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார்.
 
வெற்றி பெற்ற அன்சாரி 14-வது துணை ஜனாதிபதியாக 11-ம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். துணை ஜனாதிபதி பதவியில் அன்சாரி 2017-ம் ஆண்டு வரை நீடிப்பார்.
 
1937-ல் கொல்கத்தாவில் பிறந்த அன்சாரி 2 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். 2000 முதல் 2002-ம் ஆண்டு வரை அலிகார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், அதன்பின்னர் 2006-2007 காலகட்டத்தில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, கருணாநிதியுடன் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif