Logo
சென்னை 24-04-2014 (வியாழக்கிழமை)
இந்திய தேர்தல் ஆணையராக சையத் நசீம் நியமனம்
புதுடெல்லி, ஆக. 7-
 
தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வு பெற்றார். தேர்தல் ஆணையராக இருந்த சம்பத், அவருக்குப் பதிலாக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் சம்பத் வகித்த தேர்தல் ஆணையர் பணியிடம் காலியாக இருந்தது.
 
இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையராக சையத் நசிம் அகமது ஜாய்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பிறப்பித்தார்.
 
1976-ல் ஐஏஎஸ் பயிற்சியை முடித்த ஜாய்தி, விமான போக்குவரத்து துறையின் செயலாளராக பணியாற்றினார். கடந்த மாதம் 31-ம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து தற்போது தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தேர்தல் ஆணையத்தின் மற்றொரு ஆணையராக எச்.எஸ். பிரம்மா செயல்பட்டு வருகிறார்.

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பாலியல் தொந்தரவு அளிப்பதாக பிரின்சிபால், மானேஜர் மீது ஆசிரியை புகார்

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விகாரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ....»