வசூலித்த நன்கொடையை திருப்பி வழங்க சென்னை தனியார் பள்ளிக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு || Chennai school asked refund donation admitting child
Logo
சென்னை 31-03-2015 (செவ்வாய்க்கிழமை)
  • கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
  • 2000-ம் ஆண்டில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது
  • வேளச்சேரி விஜயநகரம் பஸ் நிலையத்தில் முன்பதிவு மையம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
  • ஜம்மு- காஷ்மீரில் 15 உடல்கள் மீட்பு
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 9 பேருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
  • மத்திய மந்திரி சபை இன்று மாலை கூடுகிறது: நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து ஆலோசனை
வசூலித்த நன்கொடையை திருப்பி வழங்க சென்னை தனியார் பள்ளிக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு
வசூலித்த நன்கொடையை திருப்பி வழங்க சென்னை தனியார் பள்ளிக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு
புதுடெல்லி, ஆக. 7-

மாணவர் சேர்க்கையின்போது வசூலித்த நன்கொடை ரூ.25 ஆயிரத்தை திரும்ப வழங்கவேண்டும் என்று சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தனது முதல் குழந்தையை சேர்த்தார். இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு தனது 2-வது குழந்தையை எல்.கே.ஜி.யில் சேர்த்தபோது அவரிடம் ரூ.25 ஆயிரம் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்விக் கட்டணம், சிறப்பு கட்டணத்துடன் சேர்த்து கட்டிட நிதியும் வசூலித்துள்ளனர். இதுபற்றி தமிழ்ந்டு நுகர்வோர் ஆணையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார். அவரது மனுவை விசாரித்த ஆணையம், தானாக முன்வந்து ராஜேந்திரன் நன்கொடை கொடுத்ததாக கூறியதுடன், அந்த பணத்தை பள்ளி நிர்வாகம் திருப்பிதர தேவையில்லை என்று தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய நுகர்வோர் ஆணையத்தில் ராஜேந்திரன் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணைய உறுப்பினர் அனுபவம் தாஸ்குப்தா தலைமையிலான பெஞ்ச், இன்று தீர்ப்பு அளித்தது.

ராஜேந்திரன் நன்கொடை கொடுத்ததற்காக வழங்கப்பட்ட ரசீதில் ஆடிட்டோரியம் கட்டுவதற்கு தனியாக நிதி வசூலித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அந்த பணத்துடன் வழக்கு செலவுக்கான ரூ.5000 ஆகியவற்றை வட்டியுடன் சேர்த்து வழங்கும்படி உத்தரவிட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

திருமலை தேவஸ்தானம் சார்பில் அனைத்து மாநில தலைநகரிலும் ஏழுமலையான் கோவில் கட்டப்படும்

நகரி, மார்ச். 31–திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.பக்தர்களின் வசதிக்காகவும், ....»