ஆப்கானிஸ்தானில் நோட்டோ படை குண்டுவீச்சில் தீவிரவாதி தலைவன் பலி || Afghanistan NATO bomb blast militant leader killed
Logo
சென்னை 03-08-2015 (திங்கட்கிழமை)
ஆப்கானிஸ்தானில் நோட்டோ படை குண்டுவீச்சில் தீவிரவாதி தலைவன் பலி
ஆப்கானிஸ்தானில் நோட்டோ படை குண்டுவீச்சில் தீவிரவாதி தலைவன் பலி
காபூல், ஆக. 7-

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நோட்டோ படைகள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றன. இந்நிலையில் ரோகர் மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அங்கு நேட்டோ படையின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அப்போது ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்த தீவிரவாதி ஷெர்முகமது ஹகிமி கொல்லப்பட்டான். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

கொல்லப்பட்ட ஹகிமி ஹக்கானி தீவிரவாத குழு தலைவர்களில் ஒருவன் ஆவான். அவன் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தான். மேலும் ரோட்டோரங்களில் குண்டுகளை வைத்து அவற்றை திறமையாக வெடிக்க செய்து வந்தான்.

இந்த மாகாணத்தில் இருந்து ஹக்கானி தீவிரவாத இயக்க தலைவன் முகமது அக்ஹாவுக்கு ஆயுதங்களை கடத்தி வந்தான்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

துருக்கியில் தற்கொலை படை தாக்குதல்: 2 வீரர்கள் உயிரிழப்பு

துருக்கி நாட்டில் 1 கோடியே 50 லட்சம் குர்து இனத்தினர் வசிக்கிறார்கள். அங்கு குர்து இன ....»

MM-TRC-B.gif