அசாம் கலவரத்தில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை: ஊரடங்கு உத்தரவு || assam riot shoot killing
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
  • வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்: ஜம்மு- காஷ்மீர் முதல்வர் முப்தி
  • ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஹாடின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு
  • திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய்
  • எல்.கே. அத்வானி, அமிதாப் பச்சன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி வழங்கினார்
அசாம் கலவரத்தில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை: ஊரடங்கு உத்தரவு
அசாம் கலவரத்தில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை: ஊரடங்கு உத்தரவு
கவுகாத்தி, ஜூலை.7-

அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடி இன மக்களுக்கும் சிறுபாண்மை சமுதாயத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

கலவரம் பாதித்த கோக்ராஜர், சிராங், துப்ரி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கோக்ராஜர் மாவட்டத்தில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது.

இங்குள்ள ராணிபுலி கிராமத்தில் இரவு புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்கள். இதில் 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கலவரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. கலவரக்காரர்கள் ராணிபுலி கிராமத்தில் சில வீடுகளை தீவைத்துக் கொளுத்தினார்கள். போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டதாக போலீஸ் ஐ.ஜி. விஷ்ணாய் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோக்ராஜர் மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அருகில் உள்ள சிராங் மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலவரம் தொடர்பாக சிராங்பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

திருப்பதி கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா

திருமலை, மார்ச்.30–திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மாலை 6 ....»