விளாங்குடியில் மனைவி தற்கொலை செய்ததால் கணவன் ரெயில் முன் பாய்ந்து சாவு: போலீசார் விசாரணை || vilangudi wife suicide husband train front dead police investigation
Logo
சென்னை 19-09-2014 (வெள்ளிக்கிழமை)
  • மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் மரணத்திறக்கு பிரதமர் மோடி இரங்கல்
  • வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த டோனி
  • மதுரையில் 3 பேர் வெட்டிக்கொலை
விளாங்குடியில் மனைவி தற்கொலை செய்ததால் கணவன் ரெயில் முன் பாய்ந்து சாவு: போலீசார் விசாரணை
விளாங்குடியில் மனைவி தற்கொலை செய்ததால் கணவன் ரெயில் முன் பாய்ந்து சாவு: போலீசார் விசாரணை
மதுரை, ஆக. 7-  
 
மதுரை புதுவிளாங்குடி சூர்யா நகரைச் சேர்ந்தவர் கனகவேல் (வயது30), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராதிகா (26). இவர்களுக்கு திருமணமாகி 2 1/2 வருடம் ஆகிறது. 7 மாத கைக்குழந்தை உள்ளது. ராதிகாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. பல டாக்டர்களிடம் சென்றும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த ராதிகாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
நள்ளிரவில் ஆட்டோ ஓட்டி விட்டு வீடு திரும்பிய கனகவேல், மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதறி அழுத அவர் மனைவியின் இறப்பை தாங்க முடியாமல் பித்து பிடித்தவர்போல இருந்துள்ளார்.  
 
பின்னர் அவர் மனைவியோடு நாமும் செத்து விட வேண்டியதுதான் என முடிவு செய்து கரிசல்குளம் ரெயில்வே தண்டவாளம் அருகே இன்று காலை 6 மணிக்கு வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து கனகவேல் உயிரை மாய்த்துக்கொண்டார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரேவதியின் உடலை கூடல்புதூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

கிணத்துக்கடவு அருகே தனியார் என்ஜினீயரிங் மாணவர்கள் சாலை மறியல்

கோவை, செப். 19–கோவையை அடுத்த கிணத்துக்கடவு அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் ....»