ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு || olympic london medal win saina nehwal delhi return
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
லண்டன், ஆக. 6-

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாய்னா நேவால் சீன வீராங்கனை வாங் ஜின்னை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை சாய்னா 18-21 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தபோது வாங் ஜின் தசைப்பிடிப்பால் போட்டியில் இருந்து வெளியேறினார். அதனால் சாய்னாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே துப்பாக்கி சுடுதலில் ககன்நரங் வெண்கல பதக்கமும் (10 மீட்டர் ஏர் ரைபிள்), விஜய்குமார் வெள்ளிப்பதக்கமும் (25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்) பெற்றனர்.

ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக பதக்கம் பெற்றுள்ளது. அந்த வரலாற்று பெருமை சாய்னாவை சேரும். மேலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்கும் வீராங்கனை மல்லேஸ்வரி வெண்கல பதக்கம் பெற்று இருந்தார்.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் அவருக்கு போட்டிகள் எதுவும் இல்லாததால் லண்டனில் இருந்து நேற்று இரவு புதுடெல்லிக்கு வந்தடைந்தார். சாய்னா நேவாலுக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்களுடன் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை சாய்னா ஏற்றுக் கொண்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஆடுகளத்தில் பூதமேதுமில்லை, சிக்கல் பேட்ஸ்மேன்களின் எண்ணத்தில் தான்: கவாஸ்கர்

இந்தியா– தென் அப்பிரிக்கா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் நாக்பூரில் நேற்று முன் தினம் தொடங்கியது. தொடக்க ....»