துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிபர் ஒபாமா கண்டனம் || america obama condemn gun shooting
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிபர் ஒபாமா கண்டனம்
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிபர் ஒபாமா கண்டனம்
வாஷிங்டன், ஆக. 6-

அமெரிக்காவில் வில்கான்சின் மாகாணத்தில் ஒக்கிரீக் சீக்கியர் கோவிலில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டுக்கு அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குருத்வாராவில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தை அறிந்து நானும், (ஒபாமா), எனது மனைவி மிச்செலியும் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள் ளோம். இது ஒரு மிகுந்த துயர சம்பவமாகும். துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உதவிகளையும், ஆதரவையும் எனது அரசு வழங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு வில்கான்சின் மாகாண செனட் உறுப்பினர் ஹெர்ப் கோல் கண்டனமும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். அதில், இந்தநாள் ஒக்கிரீக் நகரத்தின் துக்க நாளாகும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து சமூகத்தினரின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதல் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கா குருத் வாராவில் பக்தர்கள் மீது நடந்த இந்த கொடூர சம்பவம் மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. எனவே மத வழிபாட்டு தலங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். துணை முதல்-மந்திரி சுக்பர்சிங் பாதலும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல்

தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ரஷ்ய விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு ....»

MudaliyarMatrimony_300x100px.gif