சிரியா அதிபருக்கு எதிராக ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு: இந்தியா உள்பட 31 நாடுகள் புறக்கணிப்பு || syria president against vote UNESCO resolution
Logo
சென்னை 03-09-2014 (புதன்கிழமை)
சிரியா அதிபருக்கு எதிராக ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு: இந்தியா உள்பட 31 நாடுகள் புறக்கணிப்பு
சிரியா அதிபருக்கு எதிராக ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு: இந்தியா உள்பட 31 நாடுகள் புறக்கணிப்பு
நியூயார்க், ஆக. 5-

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கடந்த 1 1/2 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. அவர்கள் நடத்தும் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபையும், உலக நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருந்தும் எந்தவித முடிவும் ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து அதிபர் பஷர் அல்-ஆசாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர் பதவி விலக மறுத்துவிட்டார். இந்த நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என ஐ.நா. சபையில் சவுதி அரேபியா தீர்மானம் கொண்டு வந்தது. அந்த ஓட்டெடுப்பு நேற்று நடந்தது.

அதில், ஐ.நா. வில் உள்ள 193 நாடுகள் கலந்து கொண்டு வாக்களித்தன. அதில் 133 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அனால், இந்தியா உள்ளிட்ட 31 நாடுகள் ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. ரஷியா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்