ஒலிம்பிக்கில் வென்ற பதக்கம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும்: சாய்னா பெருமிதம் || olympic medal winner saina nehwal encouragement young players
Logo
சென்னை 19-04-2015 (ஞாயிற்றுக்கிழமை)
ஒலிம்பிக்கில் வென்ற பதக்கம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும்: சாய்னா பெருமிதம்
ஒலிம்பிக்கில் வென்ற பதக்கம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும்: சாய்னா பெருமிதம்
லண்டன்,ஆக. 5-
 
ஒலிம்பிக் போட்டியில் நேற்று பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார். அவரை எதிர்த்து விளையாடிய சீன வீராங்கனை காயமடைந்து வெளியேறியதால் சாய்னா எளிதில் வெற்றி பெற்றார்.
 
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை சாய்னா பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதல் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
 
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது குறித்து சாய்னா கூறுகையில், இன்றைய போட்டியில் நான் பதக்கம் வென்றதை நம்ப முடியவில்லை. போட்டி கடுமையாக இருந்ததால் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் எனது கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.
 
ஒலிம்பிக் போட்டிக்காக அதிக எதிர்பார்ப்புடன், கடுமையாக பயிற்சி செய்திருந்தேன். ஆரம்பத்தில் அவர் (சீன வீராங்கனை) ஓய்வு எடுப்பதற்காகத்தான் தரையில் இருந்தார் என நினைத்தேன். அதன்பிறகுதான் அவருக்கு காயம் என்பதை உணர்ந்தேன்.இது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், அவரை எப்படியும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 
 
ஒலிம்பிக்கில் இப்போது நான் வென்றுள்ள பதக்கம், இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், சிறந்த வீரர்களை உருவாக்குவதாகவும் அமையும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்த வெற்றியை கொண்டாடப்போவதில்லை என்று கூறிய சாய்னா, சில நாட்கள் ஓய்வெடுத்து எனக்கு பிடித்த திரைப்படங்களை பார்க்கப் போகிறேன். என் தந்தை என்னை சாக்லேட் சாப்பிட அனுமதிக்கவில்லை, ஆனால் இப்போது என்னால் சாக்லேட் சாப்பிட முடியும். இதனால் நான் குண்டானாலும் பிரச்சினையில்லை என்று குழந்தைத் தனமாக சிரித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அரிய பொக்கிஷமான டைட்டானிக் சேருக்கு கடும் போட்டி: பெரும் தொகைக்கு ஏலம்

103 ஆண்டுகள் என்ன ஆயிரமாண்டுகள் ஆனாலும் டைட்டானிக் கப்பலுக்கு உள்ள மவுஸ் குறையவே குறையாது போலிருக்கிறது. ....»