குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் பா.ஜனதாவில் இருந்து விலகல்: தனிக்கட்சி தொடங்குகிறார் || gujarat ex cm Keshubhai Patel avoidance
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • இலங்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பார்வையிட்டார்
  • தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியசாமி
  • போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் உயிரிழந்தார்
குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் பா.ஜனதாவில் இருந்து விலகல்: தனிக்கட்சி தொடங்குகிறார்
குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் பா.ஜனதாவில் இருந்து விலகல்: தனிக்கட்சி தொடங்குகிறார்
அகமதாபாத், ஆக. 4-

குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான கேசுபாய் படேல், கட்சியிலிருந்து விலகினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரிக்கு அனுப்பினார்.

தனது ஆதரவாளர்களான காசிராம் ராணா, சுரேஷ் மேத்தா ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு கேசுபாய், கட்சியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார். முதல்வர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகியுள்ள அவர், மோடியின் எதிர்ப்பாளர்களை திரட்டி புதிய கட்சியை தொடங்க உள்ளார். தனது புதுக்கட்சி அறிவிப்பை நாளை வெளியிட உள்ளார். அத்துடன் இந்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

தனது புதிய கட்சியில் இந்துத்துவா கொள்கை இருந்தாலும், முஸ்லிம்கள் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். குஜராத் மக்கள் தொகையில், படேல் சமூகத்தினர் 18 சதவீதம் உள்ளனர். அவர்களின் ஆதரவுடன் மீண்டும் அரசியல் களத்தில் பிரகாசிக்க முடியும் என்று கேசுபாய் படேல் நம்பிக்கையில் இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக பொதுக்கூட்டங்களில் கேசுபாய் படேல், மோடியை பகிரங்கமாக விமர்சனம் செய்து வந்தார். மோடியின் ஆட்சியில் மக்கள் பயத்துடனே வாழ்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கடந்த 2001ம் ஆண்டு கேசுபாய் படேல் முதல்வர் பதயிலிருந்து நீக்கப்பட்டு, நரேந்திர மோடி முதல்வராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு: கடற்படை அதிகாரி கேரள கோர்ட்டில் ஆஜர்

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் கடற்படை தளம் உள்ளது. இங்கு அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சுனில்குமார் சாகு. ....»