நீலாங்கரை அருகே மகன் திட்டியதால் தந்தை தற்கொலை || son scold father suicide neelankarai
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
  • தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
  • மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் 48 மணி நேரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி
நீலாங்கரை அருகே மகன் திட்டியதால் தந்தை தற்கொலை
நீலாங்கரை அருகே மகன் திட்டியதால் தந்தை தற்கொலை
திருவான்மியூர், ஆக.4-

நீலாங்கரையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பம் அண்ணா தெருவில் வசித்து வந்தவர் கமலக்கண்ணன் (வயது 50). தச்சு தொழிலாளி. இவரது மகன் சுகுமார் (30). கமலக்கண்ணன் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரை மகன் கண்டித்தார்.

எதற்காக வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய் என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கமலக்கண்ணன் மனம் உடைந்தார். வளர்த்து ஆளாக்கிய மகன் தன்னை அவமானமாக பேசுகிறானே என்று வேதனை அடைந்த அவர் விரக்தியில் மது குடித்தார். பின்னர் அங்குள்ள சுடு காட்டிற்கு சென்றார். மரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

இரவு நேரமாகியும் தந்தை வீட்டிற்கு வராததால் மகன் பல இடங்களில் தேடினார். இன்று காலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் உறவினருக்கு கிடைத்தது. இதுபற்றி கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை, அக். 23–தமிழ்நாட்டில் கடந்த 18–ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif