இந்திய தனியார் துறைகள் இலங்கை துறைமுகங்களில் முதலீடு செய்யும்: ஆனந்த் ஷர்மா உறுதி || Indian pvt sector will invest in ports Sri Lanka Sharma
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
இந்திய தனியார் துறைகள் இலங்கை துறைமுகங்களில் முதலீடு செய்யும்: ஆனந்த் ஷர்மா உறுதி
இந்திய தனியார் துறைகள் இலங்கை துறைமுகங்களில் முதலீடு செய்யும்: ஆனந்த் ஷர்மா உறுதி
கொழும்பு, ஆக. 4-

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னேற்றத்திற்காக துறைமுகங்கள் மேம்பாடு மற்றும் எண்ணெய்- எரிவாயு பகுப்பாய்வு துறைகளில் இந்திய தனியார் துறைகள் முதலீடு செய்யும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் பகுதிகளில் இந்திய அரசு சார்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு வீடுகளை இழந்த தமிழர்களுக்கு சுமார் 50 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். முன்னதாக கொழும்பில் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் பகுதியில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் துறைமுகங்களை தரம் உயர்த்த இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.  இதற்காக அந்த நிறுவனங்களுக்கு வங்ககிள் கடன் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பொறியியல், உதிரி பாகங்கள் தயாரிக்கவும், உற்பத்தி பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வழிவகை செய்யும் வகையில் உற்பத்தி மண்டலம் அமைக்க இந்தியா உதவி செய்யும். திரிகோண மலையில் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொழும்பில் 108 இந்திய நிறுவனங்கள் பங்குகொள்ளும் வர்த்த கண்காட்சியில் அமைச்சர் ஆனந்த் சர்மா பங்கேற்க உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சிரியாவில் ரஷ்யா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பலி: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக துருக்கி தகவல்

சிரியாவில் அரசு ஆதரவு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே சிரியாவில் ஐ.எஸ் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif