காசி தியேட்டரில் பெண் கொலை: துப்புரவு ஊழியர்கள் 2 பேர் சிக்கினர் || kasi theater woman murder
Logo
சென்னை 29-12-2014 (திங்கட்கிழமை)
  • 3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 465 ரன்களுக்கு ஆல்அவுட்
  • தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி
  • பெங்களூரில் குண்டு வெடிப்பில் பலியான சென்னை பெண் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி: கர்நாடக அரசு அறிவிப்பு
  • சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
காசி தியேட்டரில் பெண் கொலை: துப்புரவு ஊழியர்கள் 2 பேர் சிக்கினர்
காசி தியேட்டரில் பெண் கொலை: துப்புரவு ஊழியர்கள் 2 பேர் சிக்கினர்
சென்னை, ஆக. 4-

சென்னை கே.கே. நகர் காசி தியேட்டரில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்தவர் பார்வதி. காலையில் வேலைக்கு வந்து துப்புரவு பணியை முடித்து விட்டு, மதியம் வீட்டுக்கு சென்று விடுவார். இதேபோல் கடந்த 1-ந் தேதி காலையில் வேலைக்கு வந்த பார்வதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

அவரது மகன் முருகன், மதியம் தியேட்டருக்கு வந்து விசாரித்தார். பார்வதியை காணாததால் தியேட்டர் ஊழியர்களும சேர்ந்து தேடினார்கள். எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தியேட்டரின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்வதி பிணமாக கிடப்பதை அங்குள்ள எலக்ட்ரீசியன் கண்டுபிடித்தார். உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் பிணத்தை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். பார்வதியை யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்து காதில் கிடந்த கம்மலையும் திருடியது தெரியவந்தது. இதனால் போலீசார் தியேட்டர் ஊழியர்கள் அனைவரையும் பிடித்து விசாரித்ததில் துப்புரவு ஊழியர் கள் 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். ஒருவர் பெயர் ராஜா, இன்னொருவர் ரவி. இருவரும் சைதாப்பேட்டையை சேர்ந்தவர்கள். 2 மாதத்திற்கு முன்புதான் துப்புரவு வேலையில் சேர்ந் தார்கள். இருவரும் சரிவர வேலை செய்தாததால் பார்வதி கண்டித்துள்ளார்.

தியேட்டர் நிர்வாகத்திடமும் புகார் செய்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து பார்வதியை கீழே தள்ளியதில் இறந்து விட்டார். பின்னர் அவர் அணிந்திருந்த கம்மலை திருடிக் கொண்டு, தண்ணீர் தொட்டியில் பிணத்தை தூக்கி வீசி விட்டனர். போலீசார் இவர்கள் இருவரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

அதிக பஸ்கள் இயக்கப்படாததால் மின்சார ரெயில்களில் அலைமோதிய கூட்டம்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்தத்தில் ....»