வருகிற 9 ந்தேதி, அடுத்த மாதம் 8 ந்தேதி ஆடி ஆவணி மாதங்களில் 2 கிருஷ்ண ஜெயந்தி விழா || krishna jayanthi festival
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
வருகிற 9-ந்தேதி, அடுத்த மாதம் 8-ந்தேதி ஆடி-ஆவணி மாதங்களில் 2 கிருஷ்ண ஜெயந்தி விழா
வருகிற 9-ந்தேதி, அடுத்த மாதம் 8-ந்தேதி ஆடி-ஆவணி மாதங்களில் 2 கிருஷ்ண ஜெயந்தி விழா
மகாபாரத போர் முடித்து பகவத்கீதை தந்த ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும். ஆவணி மாதம் பவுர்ணமி முடிந்து 8-வது நாளில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததாக வரலாறு.

இந்த தினத்தில்தான் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படும். ஆவணி மாதம் அஷ்டமி திதியை கணக்கிட்டு கோகுலாஷ்டமியை சைவர்களும், மற்றவர்களும் கொண்டாடுவார்க்ள. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தை கணக்கிட்டு ஜெயந்தி என்று வைணவர்களும் கொண்டாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் ஒன்றப்பின் ஒன்றாக ஆவணி மாதத்திலேயே வரும். ஆனால் இந்த ஆண்டு நாள் மட்டுமல்ல மாதமே மாறி வருகிறது.

இதனால் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது எப்போது? என்ற குழப்பம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அரசு காலண்டரில் அடுத்த மாதம் (செப்டம் பர்) 8-ந்தேதியை கிருஷ்ண ஜெயந்தியாக குறிப்பிட்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருசாரார் இந்த மாதம் 9-ந்தேதி (வியாழக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம், ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசை (ஆவணி 1, 30) வருகிறது. ஒரு மாதத்தில் 2 அமாவாசை வந்தால் அந்த மாதத்தில் சுபநிகழ்ச்சிகள், பண்டிகைகள் கொண்டாடுவது தவிர்க்கப்படும்.

அந்த வகையில் ஆடி அமாவாசைக்கு பிறகு ஆவணி மாதம் பிறந்ததாக கணக்கிட்டு ஆவணி மாத விழாக்களை முன்கூட்டியே கொண்டாடி விடுவதுண்டு. அந்த வகையில் ஆகஸ்டு 1-ந்தேதி அதாவது ஆடி மாதம் 17-ந்தேதியே ஆவணி அவிட்டம் கொண்டாடப்பட்டது. ஆவணி அவிட்டநாளில் இருந்து 8-வது நாளில் (அஷ்டமி திதி) கோகுலாஷ்டமியாக கணக்கில் எடுத்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் ஸ்ரீரங்கம், திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட வைணவ திருத்தலங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதியே கொண்டாடுகிறார்கள். இதேபோன்ற தேதி குழப்பம் 2009-ம் ஆண்டும் ஏற்பட்டது. அப்போது வட மாநிலங்களில் ஆகஸ்டு 14-ந்தேதியும், தென் மாநிலங்களில் செப்டம்பர் 1, மற்றும் 2-ந்தேதிகளில் கொண்டாடப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

நடவடிக்கை எடுப்பதாக மிரட்டல்: கோபண்ணாவுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம்

சென்னை, பிப். 12–தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஒரு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif