நிலம் பற்றாக்குறையால் அங்கீகாரம் பெற முடியாத 1000 மெட்ரிக் பள்ளிகள் || land shortage 1000 Matriculation Schools
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
நிலம் பற்றாக்குறையால் அங்கீகாரம் பெற முடியாத 1000 மெட்ரிக் பள்ளிகள்
நிலம் பற்றாக்குறையால்
 அங்கீகாரம் பெற முடியாத
 1000 மெட்ரிக் பள்ளிகள்
சென்னை, ஆக. 4-

நிலம் பற்றாக்குறையால் அங்கீகாரம் பெற முடியாமல் 1000 மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடங்கள் செயல்படுவதாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-

பள்ளி பஸ் ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியான சிறுமி சுருதியின் குடும்பத்திற்கு சீயோன் பள்ளி நிர்வாகம் ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். எங்களது சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்படும். இது போன்ற சம்பவம் இனி எங்கும் நடக்க கூடாது.

பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறோம். அங்கீகாரம் இல்லாமல் 1000 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நிலம் குறைவாக இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால் அங்கீகாரம் தர மறுக்கின்றனர்.

இந்த பள்ளிகளின் வாகனங்களுக்கு தகுதிச் சான்று கேட்டால், பள்ளியின் அங்கீகாரச் சான்றிதழ் கேட்கின்றனர். இந்த பள்ளிகளில் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால் என்னாவது, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டும் என்று இருப்பதை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற நிலையில் மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif