மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கு: அன்புமணிக்கு முன்ஜாமீன் || medical college allow case anbumani ramadoss bail
Logo
சென்னை 03-06-2015 (புதன்கிழமை)
மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கு: அன்புமணிக்கு முன்ஜாமீன்
மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கு: அன்புமணிக்கு முன்ஜாமீன்
புதுடெல்லி, ஆக.4 -

இந்தூர் மருத்துவக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்தது தொடர்பான புகாரில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அமைச்சரவை செயலக இயக்குனர் ராவ், சுகாதார அமைச்சக அதிகாரி சுதர்சன் குமார் மற்றும் மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் டோங்கியா, மருத்துவ இயக்குனர் சக்சேனா உள்ளிட்ட 8 பேரும் இவ்வழக்கின் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  விசாரணையின்போது தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அன்புமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு அன்புமணி ஆஜரானார். அப்போது அவரது ஜாமீன் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக ஆகஸ்டு 4ம் தேதிக்குள் பதில் தரவேண்டும் என்று சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ஆஜாகி விளக்கம் அளித்தார். அப்போது, அன்புமணி உள்ளிட்ட 9 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கப்படுவதாக சிறப்பு நீதிபதி தல்வந்த்சிங் அறிவித்தார்.

அத்துடன் சிபிஐ விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்தார். அவர்கள் மீது குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையின்போது அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி இல்லை: பா.ஜ.க. உறுதி

பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின் போது மத்திய மந்திரி ரவி சங்கர் ....»