பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்கும் டெல்லி பெண்கள் || Gun for protection hearing Delhi girls
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்கும் டெல்லி பெண்கள்
பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்கும் டெல்லி பெண்கள்
புதுடெல்லி, ஆக 4-

டெல்லியில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள காவல் துறையிடம் அனுமதி கேட்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் துப்பாக்கி லைசென்சு கேட்டு 900 விண்ணப்பங்கள் காவல் துறைக்கு வந்து உள்ளது.

2010-ம் ஆண்டு 320 பேரிடம் இருந்து வந்த விண்ணப்பம் 2011-ம் ஆண்டு 500 ஆக அதிகரித்துள்ளது. அதில் 20 முதல் 22 சதவீதம் விண்ணப்பம் பெண்களிடம் இருந்து வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் பணிபுரியும் பெண்கள் ஆவார்கள்.

தங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வேண்டும் என கூறுகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, 2010-ம் ஆண்டு 27 பெண்களுக்கு துப்பாக்கி லைசென்சு வழங்கப்பட்டு உள்ளது.

2011-ல் 33 பெண்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 5 பெண்கள் துப்பாக்கி லைசென்சு பெற்றுள்ளனர். அனைவரும் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்டுள்ளனர். மேலும் 600 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி: சிவசேனாவுக்கு துணை முதல்–மந்திரி பதவி

மும்பை, அக் 23–மராட்டிய சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வில்லை. மொத்தம் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif