கடைசி ஒருநாள் போட்டி: இலங்கை வெற்றி பெற 295 ரன் இலக்கு || last oneday cricket match gautam gambhir
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
கடைசி ஒருநாள் போட்டி: இலங்கை வெற்றி பெற 295 ரன் இலக்கு
கடைசி ஒருநாள் போட்டி: இலங்கை வெற்றி பெற 295 ரன் இலக்கு
பல்லெகெலே, ஆக. 4-

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா 3 போட்டிகளிலும், இலங்கை ஒரு போட்டியிலும் வென்றது. இதனால் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி பல்லெகெலே சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது. இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு மேத்யூஸ் கேப்டனாக செயல்பட்டார்.

இந்திய அணியில் துவக்க வீரர் சேவாக் நீக்கப்பட்டு ரகானே அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

காம்பீர்-ரகானே துவக்க வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக காம்பீர், ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்தார். 5-வது ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்து இந்த இலக்கை அவர் எட்டினார். அடுத்த ஓவரில் ரகானே, பெரைரா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் எடுத்த ரன்கள் 9 மட்டுமே.

இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கோலி, 33 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.அவரது விக்கெட்டை பிரதீப் கைப்பற்றினார். அடுத்து வந்த ரோகித் சர்மாவும் (4) ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணியின் ரன் விகிதம் வெகுவாக குறைந்தது. இந்த சூழ்நிலையில் காம்பீருடன் இணைந்த திவாரி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரை சதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 197 ஆக இருந்தபோது திவாரி 65 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரெய்னா வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் நிதானமான ரன் சேர்த்து வந்த துவக்க வீரர் காம்பீர், 88 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். திவாரி-காம்பீர் ஜோடி 110 ரன்கள் சேர்த்தது. கடைசிநேரத்தில் அதிரடியாக ஆடிய டோனி-இர்பான் பதான் ஜோடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

டோனி 58 ரன்களும், பதான் 29 ரன்களும் (நாட்அவுட்) விளாசினர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்க 294  ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஐ.பி.எல். சீசன் 9: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் நியமனம்

9 தொடர் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கி மே மாதம் 29-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif