ஸ்கூட்டி மீது லாரி மோதியது: பெண் போலீஸ் பலி || scooty loory hit woman police dead
Logo
சென்னை 22-09-2014 (திங்கட்கிழமை)
ஸ்கூட்டி மீது லாரி மோதியது: பெண் போலீஸ் பலி
ஸ்கூட்டி மீது லாரி மோதியது: பெண் போலீஸ் பலி
தாம்பரம், ஆக. 4-

தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் தாமரைத் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். பெண் போலீஸ் இவரது மகள் வெற்றிச்செல்வி (24). இவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். நேற்று விபசார தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இன்று காலை வெற்றிச் செல்வி சேலையூர் போலீஸ் நிலையத்திற்கு ஸ்கூட்டியில் புறப்பட்டார். ஜி.எஸ்.டி. சாலையில் இரும்புலியூர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டி மீது திடீரென மோதியது. தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

போலீசார் விரைந்து சென்று உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றிச்செல்விக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு புளியங்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் குமாரை கைது செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - காஞ்சிபுரம்

section1

கடலோர காவல்படை அதிகாரி மகள் 10–வது வகுப்பு மாணவி தற்கொலை

ஆலந்தூர், செப். 22–கடலோர காவல்படை அதிகாரியாக இருப்பவர் சுரேந்திரகுமார் ராம்.இவர் பழவந்தாங்கலை அடுத்த நல்ல நல்லூர் ....»