ஊழல் வழக்கில் பிஜி முன்னாள் பிரதமருக்கு 1 ஆண்டு ஜெயில் || bribe complaint PG ex prime minister one year jail
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
ஊழல் வழக்கில் பிஜி முன்னாள் பிரதமருக்கு 1 ஆண்டு ஜெயில்
ஊழல் வழக்கில் பிஜி முன்னாள் பிரதமருக்கு 1 ஆண்டு ஜெயில்
சுவா, ஆக. 4-

தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி நாட்டின் முன்னாள் பிரதமர் லைசெனியா குயாரசே (71). இவர் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். அப்போது ஏற்பட்ட புரட்சியின் மூலம் இவரை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆடசியை பிடித்தது.

கடந்த 1990-ம் ஆண்டுகளில் இவர் சமூக சேவகராக இருந்தார். அப்போது 1992 முதல் 1995-ம் ஆண்டு வரை அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பதவி வகித்தபோது ஊழல் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியந்தா பெர்ணான்டோ அவருக்கு 12 மாதங்கள் அதாவது 1 ஆண்டு ஜெயில் தண்டனை வதித்து தீர்ப்பு கூறினார்.

இவருக்கு முன்பு பிரதமராக இருந்த மகேந்திர சவுத்ரி கடந்த 2000-ம் ஆண்டு பதவி இழந்தார். இவர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் சில மாதங்களில் விசாரணைக்கு வர உள்ளது
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சீனாவில் ரயில் நிலையத்தில் 9 பயணிகளுக்கு கத்திகுத்து: கொடூரமான செயலில் ஈடுபட்டவரை சுட்டுக்கொன்றது சீன போலீஸ்

சீன தலைநகர் பீஜிங் அருகே உள்ள ரெயில் நிலையத்தில் 9 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியவரை ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif