ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி: விகாசின் வெற்றி செல்லாததாக அறிவிப்பு || olympic boxing vikas victory overturned
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • சென்னை மாநில கல்லூரியில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் 16-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி: விகாசின் வெற்றி செல்லாததாக அறிவிப்பு
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி: விகாசின் வெற்றி செல்லாததாக அறிவிப்பு
லண்டன், ஆக.4-

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் 69 கிலோ லைட் வெயிட் பிரிவின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் அமெரிக்க வீரர் எரோல் ஸ்பென்சுடன் மோதினார். இந்த போட்டியின் முடிவில் 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் விகாஸ் வெறி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கால் இறுதிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார் விகாஸ். ஆனால் அவரது வெற்றி மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

நடுவர்களால் சரியான முடிவு எடுக்கப்படவில்லை என சர்வதேச பாக்சிங் சம்மேளனத்தில் அமெரிக்க வீரர் புகார்  அளித்தார். மூன்றாவது சுற்றில் 9 பவுல் செய்தும் ஒரே ஒரு முறை தான் நடுவரால் விகாஸ் கண்டிக்கப்பட்டார் என அவரது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது புகாரினை ஏற்றுக்கொண்டு பதிவு செய்யப்பட்ட போட்டியை மீண்டும் பார்வையிட்டனர். பின்னர் நடுவர்கள் ஒருமனதாக எரோலுக்கு 4 புள்ளிகள் வழங்க தீர்மானம் எடுத்தனர். இதனால் எரோல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு விகாசின் வெற்றி செல்லாது எனவும் அறிவித்தது. தற்போது 13-15 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்த சர்சையால் விகாஸ் தனது பதக்க வாய்ப்பை இழந்துள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்

27 அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif