மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கை: தனியார் பள்ளிகள் பஸ் வேன் கட்டணம் உயருகிறது || students saftey action private school bus van fees rising
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கை: தனியார் பள்ளிகள் பஸ்-வேன் கட்டணம் உயருகிறது
மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கை: தனியார் பள்ளிகள் பஸ்-வேன் கட்டணம் உயருகிறது
சென்னை, ஆக. 4-
 
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி பஸ்கள், வேன்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. பள்ளிகளுக்காக தனியார் இயக்கும் வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி வேன் போன்றவற்றின் ஆவணங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
பள்ளி வேன்களிலும், தனியார் வேன்களிலும், ஆட்டோக்களிலும் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவில்தான் குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
 
ஆட்டோவில் 3 குழந்தைகளும், மேக்சி வேன்களில் 12 பேரும் அனுமதிக்க வேண்டும். பள்ளி மாணவர்களை நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. இருக்கைகளில் உட்கார்ந்து செல்ல வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்து அனுப்புவதோடு தொடர்ந்து அதே தவறை செய்யும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  
 
வாகனங்களில் உரிமம் ரத்து, தகுதி சான்று ரத்து, பறிமுதல் என குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு எடுக்கும் இந்த அதிரடி நடவடிக்கையால் தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
போக்குவரத்து விதிகளின்படி குழந்தைகளை ஏற்றிச் சென்றால் அதிக குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி செல்ல இயலாது. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தனியார் பள்ளிகள், வேன் ஆபரேட்டர்கள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். கூடுதலாக 2 மடங்கு கட்டணம் வசூலித்தால்தான் பள்ளி குழந்தைகளை போக்குவரத்து அதிகாரிகள் சொல்வது போல ஏற்றிச் செல்ல முடியும் என் கிறார்கள்.  
 
எனவே தனியார் பள்ளிகள் வாகன கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கல்வி கட்டணம், நன்கொடை என்ற பெயரில் அதிக தொகையை கொடுத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட பெற்றோர்களுக்கு தற்போது வேன் கட்டணம் உயர்த்த இருப்பதால் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
பெரும்பாலான பள்ளிகள் பஸ், வேன் கட்டணத்தை முழுமையாக பெற்று விட்டன. சில பள்ளிகள் பாதியாகவும், காலாண்டாகவும் பெறுகின்றன. திடீரென மேலும் பல ஆயிரம் கட்டணம் செலுத்த கூறினால் என்ன செய்வது என்று பெற்றோர் இப்போதே விழி பிதுங்க தொடங்கி விட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சல்மான் கான் வழக்கில் புதிய திருப்பம்: விடுதலையை எதிர்த்து இறந்துபோனவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு

ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சல்மான் கான் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif