மேற்கத்திய கலாசாரத்துக்கு மாறிய மகளை கருணை கொலை செய்த பாக்.தம்பதிக்கு ஆயுள் தண்டனை || daughter killed pakistan Couples Life sentence
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
மேற்கத்திய கலாசாரத்துக்கு மாறிய மகளை கருணை கொலை செய்த பாக்.தம்பதிக்கு ஆயுள் தண்டனை
மேற்கத்திய கலாசாரத்துக்கு மாறிய
மகளை கருணை கொலை செய்த
பாக்.தம்பதிக்கு ஆயுள் தண்டனை
லண்டன், ஆக. 4-

இங்கிலாந்தில் உள்ள ஷெசியர் வாரிங்டன் பகுதியை சேர்ந்தவர் இப்திகர் அகமது (52). இவரது மனைவி பர்ஷானா அகமது (49). பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஷபீலியா அகமது (17) அலீஷா ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

அவர்கள் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்ததால் மேற்கத்திய கலாசாரத்தில் வளர்ந்தனர். இது அவர்களது பெற்றோருக்கு பிடிக்க வில்லை. கண்டித்தனர். இருந்தும் ஷபீலியா கேட்கவில்லை. மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெண்கள் போன்று ஆடை அணிந்து நண்பர்களுடன் சுற்றித் திரிந்தார். பாகிஸ்தான் கலாச்சாரப்படி மாற அவர் மறுத்து விட்டார்.

எனவே அவரை கட்டாயப் படுத்தி பாகிஸ்தானுக்கு அனுப்பினர். அங்கு 10 வயது வித்தியாசம் உள்ள ஒரு நபரை அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்தது. அதற்கு மறுத்த அவர் மீண்டும் இங்கிலாந்து திரும்பி வீட்டைவிட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் 6 மாதம் கழித்து கும்ரியாவில் உள்ள கென்ட் ஆற்றங்கரையில் ஷபீலியா கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வீட்டை விட்டு ஓடிய ஷபீலியா மீண்டும் திரும்பியபோது அவரை பெற்றோர் பிளாஸ்டிக் பையில் முகத்தில் வைத்து அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

குடும்ப மானம் போய் விட்டதாக கருதி தனது பெற்ற மகளை கவுரவ கொலை செய்தனர். இச்சம்பவம் கடந்த 2003-ம் ஆண்டு நடந்தது. எனவே கைது செய்யப்பட்ட அவர்கள் மீது ஷெல்டர் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஷபீலியாவின் பெற்றோர் இப்திகார்அகமது - பர்ஷானா அகமது ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்ப்பு கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பாகிஸ்தான் அணு ஆயுதம் குவிப்பு: அமெரிக்கா கவலை

பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு இயக்குனர் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif