டெசோ மாநாடு: தி.மு.க.இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையில் வரவேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் || teso Conference youth team white uniform come m.k.stalin request
Logo
சென்னை 28-08-2015 (வெள்ளிக்கிழமை)
டெசோ மாநாடு: தி.மு.க.இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையில் வரவேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
டெசோ மாநாடு: தி.மு.க.இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையில் வரவேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை,ஆக.4-

தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழினக்காவலர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின் சார்பில் 12.08.2012  (ஞாயிற்றுக்கிழமை) அன்று தலைநகர் சென்னையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ,அங்கெல்லாம்-அவர்தம் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதோடு, அவர்களின் பாதுகாப்பு அரணாக இருப்பது நம் இயக்கமும், தலைவர் கலைஞரும் தான் என்பது நாடறிந்த உண்மை.

இலங்கையிலே தமிழர்கள் இன்னல்களுக்கு ஆட்பட்ட போதெல்லாம் தொடர்ந்து போராடி வரும் இயக்கம் நமது இயக்கம் தான்.இரண்டு முறை ஆட்சியை இழந்திருக்கிறோம். தலைவர், பேராசிரியர் உள்ளிட்ட நம்  கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ளனர்.

தொடர்ந்து, இலங்கையிலே இனவெறி பிடித்த சிங்கள அரசால், ஈழத்தமிழர்கள் வாழ்வாதாரமற்ற நிலையிலே தவிக்கின்றனர். இதனை உலகிற்கு எடுத்துச் சொல்லவும்- சிங்கள அரசின் இனவெறிச்செயலை கைவிட வலியுறுத்துவதோடு, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி, அங்கே அவர்கள் நிம்மதியோடு வாழ வழிவகுக்க வற்புறுத்துவதற்காகத்தான் `டெசோ' மாநாடு நடத்தப்படுகிறது.

"இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க  வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங் களுக்கும்- அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு  தான் டெசோ மாநாடு இந்த  மாநாட்டிற்கான மைய நோக்கத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் பங்கேற்க வேண்டுமென''நம் தலைவர் கலைஞர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் இன்னல்களைய, அவர்தம் வாழ்வு மலர நம் நெஞ்சம் நிறைந்த  தலைவரின் சிந்தை குளிர,  இளைஞர் அணியினர் வெண்சீருடையுடன் அணி அணியாய் திரண்டு வந்து சென்னையில் நடைபெறும் டெசோ மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்திட கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மூளைக் கட்டியை அகற்றும் ஆபரேஷனின்போதும் தாளம் தப்பாமல் பாடிய வாலிபர்: வீடியோ இணைப்பு

நாம் சுவாரஸ்யமாக தாளலயத்துடன் பாடிக் கொண்டிருக்கும் வேளையில் யாராவது குறுக்கே, பேசினாலோ, தப்புத்தாளம் போட்டாலோ ஏகத்துக்கு ....»

amarprash.gif