ஒலிம்பிக் பேட்மிண்டன் வெண்கல பதக்கத்துக்காக சீன வீராங்கனையுடன் சாய்னா இன்று மோதல் || saina play against china for bronze medal match
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
ஒலிம்பிக் பேட்மிண்டன் வெண்கல பதக்கத்துக்காக சீன வீராங்கனையுடன் சாய்னா இன்று மோதல்
ஒலிம்பிக் பேட்மிண்டன் வெண்கல பதக்கத்துக்காக சீன வீராங்கனையுடன் சாய்னா இன்று மோதல்
லண்டன், ஆக.4-

லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனை சாய்னா நேவால் (இந்தியா), உலகின் முதல் நிலை வீராங்கனை வாங் யுஹானை (சீனா) எதிர்கொண்டார்.

42 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 13-21, 13-21 என்ற நேர்செட்டில் தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 6-வது முறையாக வாங் யுஹானாவிடம் தோல்வியை சந்தித்துள்ளார். அரை இறுதியில் சாய்னா தோல்வி கண்டாலும் அவரது பதக்க கனவு இன்னும் பறிபோய்விடவில்லை.

தோல்விக்கு பின்னர் சாய்னா நேவால் கூறுகையில்:

வாங் என்னை விட மிகவும் வேகமாக செயல்பட்டார். ஆடுகளத்தில் நான் நன்றாக நகரவில்லை. அதனை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார். முக்கியமான கட்டத்தில் நான் சில தவறுகளை செய்தேன். அதனால் எனக்கு பாதகம் ஏற்பட்டது. வலை அருகில் வரை வந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார். அத்தகைய ஆட்டத்துக்கு என்னால் எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை. முந்தைய நாள் கால் இறுதி ஆட்டம் முடிந்த பின்னர் என்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்றார்.

இன்று மாலை நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில், மற்றொரு அரை இறுதியில் தோல்வி கண்ட உலகின் 2-ம் நிலை வீராங்கனை வாங் ஜின்னை (சீனா) எதிர்கொள்கிறார். இதில் வெற்றி கண்டால் சாய்னா வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைக்க முடியும். இவர்கள் இருவரும் இதுவரை 6 முறை மோதி இருக்கிறார்கள். இதில் வாங் ஜின் 4 முறையும், சாய்னா 2 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் துபாயில் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif