டெசோ மாநாடு ஈழத்தமிழர்களின் காயங்களுக்கு மருந்துபோடும் மாநாடு: கனிமொழி எம்.பி. அறிக்கை || teso conference eela tamilargal Injuries medicine Kanimozhi MP
Logo
சென்னை 28-07-2015 (செவ்வாய்க்கிழமை)
டெசோ மாநாடு ஈழத்தமிழர்களின் காயங்களுக்கு மருந்துபோடும் மாநாடு: கனிமொழி எம்.பி. அறிக்கை
டெசோ மாநாடு ஈழத்தமிழர்களின் காயங்களுக்கு மருந்துபோடும் மாநாடு: கனிமொழி எம்.பி. அறிக்கை
சென்னை, ஆக.4-  
 
கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  
 
வருகிற 12-ந் தேதி சென்னை மாநகரில் "டெசோ'' அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு அல்லவா இது.
 
இந்த மாநாட்டிலே கலந்துகொண்டு சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கிறார் கருணாநிதி. இந்த மாநாடே நடைபெறாது, தடை பிறப்பிக்கப்படவிருக்கிறது என்றெல்லாம் நம் எதிரிகள் கண்ட கனவு தூள் தூளாக போகின்ற மாநாடு இது.
 
வெளிநாட்டிலிருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்கப் புறப்பட்ட தலைவர்களுக்கெல்லாம் ஒரு சிலர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு என்னென்னவோ கூறி, அவர்களின் வருகையை தடுக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போனதை மெய்ப்பிக்கப்போகின்ற மாநாடு இது.  
 
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அல்லவா? ஆட்சிப் பீடத்திலே இருப்போர் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்போது, ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே இந்த மாநாட்டினை கூட்டியுள்ளார்.
 
இதிலே கலந்துகொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு 12-ந் தேதி கூடுகின்ற "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு'' வெற்றிபெற சென்னையிலே திரண்டிடுவீர் என தி.மு.க.வின் கலை, இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் தலைவர் என்ற முறையில் உங்களையெல்லாம் அழைக்கின்றேன்.
 
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அப்துல் கலாமின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் - கோவை நண்பர் உருக்கம்

கோவை, ஜூலை 28–கோவை சாய்பாபா காலனியில் வசித்து வருபவர் சம்பத்குமார் (வயது 84). இவர் முன்னாள் ....»

MM-SCLV-B- with elevation.gif