ஒலிம்பிக் தட்டு எறிதலில் கிருஷ்ண பூனியா இறுதிக்கு தகுதி: சீமா அன்டில் தோல்வி || London 2012 Athletics Krishna Poonia qualifies for discus throw final Antil out
Logo
சென்னை 29-08-2014 (வெள்ளிக்கிழமை)
  • பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம்
  • மாலைமலர் வாசகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
  • விழுப்புரம் அருகே பாமக நிர்வாகி முருகன் வெட்டிக்கொலை
  • ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • திருவள்ளூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 100க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்
ஒலிம்பிக் தட்டு எறிதலில் கிருஷ்ண பூனியா இறுதிக்கு தகுதி: சீமா அன்டில் தோல்வி
ஒலிம்பிக் தட்டு எறிதலில் கிருஷ்ண பூனியா இறுதிக்கு தகுதி: சீமா அன்டில் தோல்வி
லண்டன்,ஆகஸ்ட்.4-
 
லண்டன் ஒலிம்பிக்கில் தட்டு எறிதல் தகுதிச்சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன. இதில் இந்தியா சார்பில் கிருஷ்ண பூனியா, சீமா அன்டில் ஆகியோர் பங்கேற்றனர்.
 
தகுதிச்சுற்றின் முதல் எறிதலில் தவறு செய்த கிருஷ்ண பூனியா, தனது இரண்டாவது வாய்ப்பில் 63.54 மீட்டர் தூரத்திற்கு தட்டு எறிந்தார். பூனியாவைப் போலவே தனது முதல் வாய்ப்பில் தவறு செய்த சீமா, இரண்டாவது வாய்ப்பில் 61.10 மீட்டர் தூரம் எறிந்தார்.
 
ஒலிம்பிக் தட்டு எறிதல் போட்டியைப் பொறுத்தவரை 63 மீட்டர் தூரம் தட்டு எறிபவர்கள் அல்லது சிறந்த 12 பேர்தான் இறுதிச்சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் 63.54 மீட்டர் தூரம் தட்டு எறிந்த கிருஷ்ண பூனியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.
 
ஆனால் 61.10 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்ததால் சீமா இருதிப்போட்டிக்கு தகுதிபெற முடியாமல் போனது. கிருஷ்ண பூனியா பதக்கம் வெல்வாரா இல்லையா என்பது இன்று இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் தெரிந்துவிடும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இங்கிலாந்துக்கு எதிராக சதம்: எனது சிறந்த ஆட்டங்களில் ஒன்று என ரெய்னா பெருமிதம்

இங்கிலாந்துக்கு எதிராக கார்டிப்பில் நேற்று முன்தினம் நடந்த 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ....»