குழந்தை நரபலி வழக்கில் கணவன் மனைவிக்கு இரட்டை ஆயுள்: மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு || child dead life sentence husband wife madurai court
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
குழந்தை நரபலி வழக்கில் கணவன்- மனைவிக்கு இரட்டை ஆயுள்: மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
குழந்தை நரபலி வழக்கில் கணவன்- மனைவிக்கு இரட்டை ஆயுள்: மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
மதுரை, ஆக. 3-
 
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த ஷெரீன் பாத்திமா என்பவர் தனது ஒன்றரை வயது ஆண் குந்தையான காதர் யூசுபுடன் கடந்த 2010 ஜூலை மாதம் 2-ம்தேதி மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தங்கியிருந்தார். அப்போது குழந்தை காதர் யூசுபை யாரோ கடத்தி சென்றுவிட்டனர்.
 
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தர்காவில் தங்கியிருந்த காயல்பட்டினத்தைச் சேந்த அப்துல் கபூர், அவரது ரமலா பீவி ஆகியோர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். உடல்நிலை சரியில்லாத ரமலா பீவி குணமடைவதற்காக குழந்தையை கடத்தி திருச்செந்தூர் அருகில் நரபலி கொடுத்து புதைத்துவிட்டதாக தெரிவித்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட  அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. குழந்தையை கடத்தி நரபலி கொடுத்த கணவன்-மனைவி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சித்தாமூர் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது

மதுராந்தகம், அக். 7–மதுராந்தகம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சர்மிஸ்ரா. இவர் சித்தாமூர் போலீசில் புகார் ....»

VanniarMatrimony_300x100px_2.gif