உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே: போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு || fasting with drawal anna hazare continue struggle
Logo
சென்னை 05-07-2015 (ஞாயிற்றுக்கிழமை)
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே: போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே: போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு
புதுடெல்லி, ஆக. 3-
 
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அன்னா ஹசாரே, இன்று மாலை 5 மணிக்கு தனது போராட்டத்தை நிறைவு செய்தார். போராட்டத்தை முன்னாள் தளபதி வி.கே.சிங் முடித்து வைத்தார். அவரது குழுவினரும் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
 
அப்போது பேசிய அன்னா ஹசாரே, ‘ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். இப்போது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவோம். ஆனால் நான் நேரடியாக தேர்தல்களில் போட்டியிடமாட்டேன். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஊழலுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன்’ என்றார்.
 
உண்ணாவிரதத்தை நிறைவு செய்த ஹசாரே குழுவின் உறுப்பினர் கெஜ்ரிவால் பேசுகையில், ‘அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் மாற்றம் ஏற்படும். புதிய அரசியல் அமைப்பின் பெயர் குறித்து மக்கள் யோசனை தெரிவிக்கலாம். எங்கள் குழுவின் உறுப்பினர்களின் வெற்றியை உறுதி செய்யுங்கள்.அவர்கள் ஊழல் வராமல் பார்த்துக்கொள்வார்கள். இதன்மூலம் பாராளுமன்றத்திலும், வெளியிலும் ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்’ என்றார்.
 
இந்தியாவில் லஞ்சம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக வி.கே.சிங் குறிப்பிட்டார்.
 
இதற்கிடையே, ஹசாரே குழுவினர் அரசியல் கட்சியாக மாறினால் அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று ஹசாரே குழு உறுப்பினரும் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே கூறினார். ‘ஹசாரேவின் உரையை நான் கேட்டேன். அதில் அவர் அரசியலுக்கு நேரடியாக வருவதுபோன்று கூறவில்லை. இதையே அவர் தொடர்வார் என்று நம்புகிறேன்’ என்றார் ஹெக்டே. அன்னா ஹசாரேயின் அரசியல் முடிவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

செல்பி மூலமாகவும் இனி ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யலாம்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க வாடிக்கையாளர்களின் செல்பி புகைப்படத்தை பயன்படுத்துவது குறித்த இறுதிக்கட்ட ஆராய்ச்சி ....»