கீழக்கரையில் ராக்கிங் ஒழிப்பு முகாம் || kizhakari ragging eradication camp
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
கீழக்கரையில் ராக்கிங் ஒழிப்பு முகாம்
கீழக்கரையில் ராக்கிங் ஒழிப்பு முகாம்
கீழக்கரை, ஆக.3-
 
கீழக்கரை முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை தாங்கினார்.
 
கல்லூரி இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கலந்து கொண்டு தமிழக ராக்கிங் தடுப்பு சட்டம் குறித்து மாணவர்களிடையே விளக்கமாக பேசினார்.
 
அப்போது மூத்த மாணவர்கள் புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவர்களிடம் சகோதரத்துடன் பழக வேண்டும். ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங்கில் ஈடுபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், இடைநீக்கம், நீக்கம், நடத்தை சரியில்லை என்பது போன்ற நடவடிக்கைகள் கல்லூரி மூலம் எடுக்கப்படும்.
 
அத்தகைய மாணவர்கள் வேறு கல்லூரியில் படிக்கவோ, வேலையில் சேரவோ முடியாது என்று தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன், முஸ்தபா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாணவர் முகமது மைதீன் நன்றி கூறினார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - இராமநாதபுரம்

section1

ராமநாதபுரத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல்: போலீஸ்காரர் கைது

ராமநாதபுரம், நவ. 30–ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக இருப்பவர் லெனின் (வயது22). இவருக்கும், பிரியங்கா என்பவருக்கும் ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif