சென்னையில் கற்பழிக்க முயன்ற தந்தையை கொன்ற பெண்ணின் வழக்கு தள்ளுபடி || chennai torture father murder lady case dismissed
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: அரையிறுதியில் கோவா அணி
  • பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்தார்: உச்சகட்ட பாதுகாப்பு
  • தகுதி வாய்ந்த நபர்களையே அரசு வழக்குரைஞர்களாக நியமிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி
சென்னையில் கற்பழிக்க முயன்ற தந்தையை கொன்ற பெண்ணின் வழக்கு தள்ளுபடி
சென்னையில் கற்பழிக்க முயன்ற தந்தையை கொன்ற பெண்ணின் வழக்கு தள்ளுபடி
சென்னை, ஆக. 3-

மாங்காடு அடுத்த கோவூரைச் சேர்ந்த அனூஜ் ஜெர்மி (19). இவர் தனது தந்தை மற்றும் தம்பியுடன் தங்கியிருந்தார். ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-வது ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த மே மாதம் 17-ந்தேதி அனூஜ் ஜெர்மி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது தந்தை குடிபோதையில் வந்து தவறாக நடக்க முயன்றார். எவ்வளவோ தடுத்தும் கற்பழிக்க முயன்றார். இதனால் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அவரது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதுபற்றிய வழக்கு ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு வழக்கு பதிவு செய்தார். என்றாலும் அனூஜ் ஜெர்மியை கைது செய்யவில்லை.

இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அனூஜ் ஜெர்மி மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பில், இளம்பெண் அனூஜ் ஜெர்மி தனது கற்பையும், தன்னையும் காத்து கொள்வதற்காக தனது தந்தையை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கொலை செய்துள்ளார்.

ஒரு பெண் தன்னையும் தன்மானத்தையும் காப்பாற்றி கொள்வதற்காக இதுபோல் நடந்து கொள்வதில் தவறு இல்லை என்று மகாத்மா காந்தியே எழுதி உள்ளார். எனவே அனூஜ் ஜெர்மி மீது தொடரப்பட்ட கொலை வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இதில் முறையாக விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்த போலீஸ் அதிகாரி அழகுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகர் மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியக் ....»

MudaliyarMatrimony_300x100px.gif