வேலூரில் வாலிபரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: 3 ஆண்டுக்கு பிறகு எலும்பு கூடு மீட்பு || vellore man murder dead body throw well
Logo
சென்னை 03-03-2015 (செவ்வாய்க்கிழமை)
வேலூரில் வாலிபரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: 3 ஆண்டுக்கு பிறகு எலும்பு கூடு மீட்பு
வேலூரில் வாலிபரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: 3 ஆண்டுக்கு பிறகு எலும்பு கூடு மீட்பு
வேலூர், ஆக.3-

வேலூர் அடுத்த கீழ்மொணவூர் பாலாற்றங்கரையில் பூவேந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இதனை ஏகாம்பரம் என்பவர் பராமரித்து வருகிறார். கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது. இதனால் கீழே உள்ள பொருட்கள் எல்லாம் அப்படியே தெரிகிறது.

ஒரு சாக்கு மூட்டை கிணற்றின் அடியில் கிடந்தது. அதில் மனித எலும்பு கூடுகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதுபற்றி விரிஞ்சிபுரம் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் எலும்புகூடை மீட்டனர்.

சாக்குமூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த பேண்ட் பாக்கெட்டில் அடையாள அட்டை ஒன்று கிடந்தது. அடையாள அட்டையில் வினோத்குமார் என்று பெயர் இருந்தது. இதற்குள் கிணற்றில் எலும்பு கூடு மீட்கப்பட்ட சம்பவம் கீழ்மொணவூர் பகுதியில் வேகமாக பரவியது. அங்கு அதிகளவில் கூட்டம் திரண்டது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான வினோத்குமார் எலும்பு கூடாக இருக்கலாம் என்று நினைத்து அவரது உறவினர்கள் கிணற்றின் அருகே வந்து கதறி அழுதனர்.

அடையாள அட்டையை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் எலும்பு கூடாக கிடந்தது. மேல்மொணவூர் அய்யங்குளத்தை சேர்ந்த சம்பத் மகன் வினோத்குமார் என்று தெரியவந்தது. வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த வினோத்குமார் கடந்த 2009ம் ஆண்டு திடீரென மாயமானர். இதுகுறித்து அவரது பெற்றோர் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வினோத்குமார் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளார். அவரை யாரோ மர்ம கும்பல் கடத்தி கொலை செய்து பிணத்தை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர். இது சம்பந்தமாக விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - வேலூர்

amarprakash160600.gif
amarprakash160600.gif