கண்களால் மட்டுமல்ல அழகிய பல் வரிசையாலும் ஆண்களை கவரலாம்: பெண்கள் பற்றிய ஆய்வில் தகவல் || beautiful set teeth woman research information
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
  • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை பயணம்
  • உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
  • சென்னை ஆலந்தூரில் தனியார் நிறுவனமொன்றில் தீ விபத்து: 3 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராட்டம்
கண்களால் மட்டுமல்ல அழகிய பல் வரிசையாலும் ஆண்களை கவரலாம்: பெண்கள் பற்றிய ஆய்வில் தகவல்
கண்களால் மட்டுமல்ல அழகிய பல் வரிசையாலும் ஆண்களை கவரலாம்: பெண்கள் பற்றிய ஆய்வில் தகவல்
லண்டன், ஆக 3-

கண்களால் மட்டுமல்ல, அழகிய பல் வரிசையாலும் ஆண்களை கவர முடியும் என்று பெண்கள் பற்றிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண்களே நீங்கள் அடுத்த முறை புன்னகைக்கும் போது, கவனமாக இருங்கள், உங்கள் புன்னகை நீங்கள் விரும்பியதை விட அதிகமானதை வெளிப் படுத்திவிடலாம்.

உங்கள் வயதையும் காட்டிக் கொடுத்து விடும். லண்டனை சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல் வரிசையை வைத்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு வகையான பல் வரிசை மாதிரிகள் தயாரிக்கப்பட்டன. அதே போல, பளிச்சிடும் வெள்ளை நிறம், லேசான பழுப்பு நிறம் கொண்டதாகவும் பல் செட்டுகள் தயார் செய்யப்பட்டன. தவிர 150 இளைஞர்கள், பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, பல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டனர். இதில் பல விஷயங்கள் தெரிய வந்தன. அது பற்றிய விவரம் வருமாறு:-

ஒழுங்கான பல் வரிசை மற்றவர்களை பெரிதும் கவர்கிறது. பழுப்பு நிற அல்லது மஞ்சள் நிற பற்கள் பற்றி பெரும்பாலோருக்கு தெரியவில்லை. அதேபோல, தெத்துப்பல், மற்றும் அதிக இடை வெளி கொண்ட பல் வரிசையை பெரும்பாலானோர் விரும்ப வில்லை. ஆனால், முறையாக நல்ல விதமாக அமைந்த பல்வரிசை பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களின் பல்லை வைத்து அவர்களது வயதை தீர்மானித்து விடலாம். இறுதி மாத விடாய் ஏற்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதையும் கண்டு பிடித்து விடலாம். கண்கள் மட்டுமின்றி வெண்மையான ஒழுங்கான பல் வரிசையாலும் ஆண்களை மயக்கி விட முடியும்.

ஆண்கள் பெண்களையும், பெண்கள் மற்ற பெண்களையும் பார்க்கும் போது, அமைதியான முறையில் பலமான விளைவு உண்டாகிறது. பெண்களின் அழகிய புன்னகையை ஆண்கள் பார்க்கும் போது, அது அவர்களை கவருகிறது. பெண்கள் பெண்களை பார்க்கும் போது பரஸ்பரம் போட்டியும், பொறாமையும் ஏற்படுகின்றன.

நமது பற்கள், இளவயதில் ஏற்பட்ட சுகவீனங்கள், உணவு முறை மற்றும் மரபு வழி கோளாறுகளையும் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் நமது கதையை பற்களே சொல்லி விடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

amarprakash160600.gif
amarprakash160600.gif