இந்தியாவில் இந்து கோவில்களில் ஷு துடைத்த பாக். அரசு வக்கீல் டிஸ்மிஸ் || Hindu temples shoe polish Government lawyer dismissed
Logo
சென்னை 06-07-2015 (திங்கட்கிழமை)
  • பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்கா சாம்பியன்
  • தருமபுரி: பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
  • 6 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
  • ஆம்பூர், வாணியம்பாடியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்
இந்தியாவில் இந்து கோவில்களில் ஷு துடைத்த பாக். அரசு வக்கீல் டிஸ்மிஸ்
இந்தியாவில் இந்து கோவில்களில் ஷு துடைத்த பாக். அரசு வக்கீல் டிஸ்மிஸ்
இஸ்லாமாபாத், ஆக.3-

பாகிஸ்தானில் உள்ள பெஷாவரைச் சேர்ந்தவர் குர்ஷித்கான். இவர் அந் நாட்டின் அரசு உதவி வக்கீலாக இருந்தார். இவர் இந்தியா வந்தபோது இந்து கோவில்கள் மற்றும் சீக்கியர்களின் குருத்வாராக்களுக்கு சென்று வந்தார். அங்கு பக்தர்களின் ஷுக்களை துடைத்து சுத்தம் செய்து பாலீஷ் செய்தார்.

மேலும் அங்கு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் தனது சமூக சேவையை கைவிடவில்லை. இதன் மூலம் தனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது என கூறி வந்தார். இந்தியா வந்த போதெல்லாம் தொடர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்து கோவில்களில் வழிபாடு செய்ய சமீபத்தில் நேபாளம் மற்றும் பூடான் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் அரசு வக்கீல் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அவர் இந்து மற்றும் சீக்கிய கோவில்களில் ஷு துடைத்தது காரணம் அல்ல என பாகிஸ்தான் அரசும், அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிரும் மறுத்துள்ளனர்.

அரசு உதவி வக்கீல் பதவி நிரந்தரமானது அல்ல. 3 வருடங்கள் மட்டுமே அதில் நீடிக்க முடியும். எனவே இவரது பதவிக் காலம் முடிந்ததால் அதில் வேறொருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார். இதற்கிடையே தான் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு இது மட்டும் காரணம் அல்ல. சுவாமி தேசிய கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அரசு நிலத்தை அபகரித்து ஓட்டல் கட்டியுள்ளார். அதை எதிர்த்தும், சில அரசியல் பிரமுகர்களின் லஞ்ச ஊழலை எதிர்த்தும் போராடி வருகிறேன். அதுவும் நான் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சவுதி அரேபியாவில் தப்பி ஓடிய தீவிரவாதி சுட்டுக்கொலை

சவுதி அரேபியாவில் மெக்கா மாகாணத்தில் உள்ள டேய்ப் நகரில், ஒரு வீட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ....»